புதிய மாற்றங்களுடன் சோதனை ஓட்டத்தில் மாருதி பிரெஸ்ஸா : எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்

மாருதி பிரெஸ்ஸா புதிய பதிப்பு சோதனை ஓட்டத்தில் காணப்பட்டுள்ள நிலையில், புதிய டர்போ இயந்திரம் மற்றும் சிஎன்ஜி வசதி சேர்க்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிப்புற வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களிலும் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மாருதி நிறுவனத்தின் பிரபல சிறிய எஸ்யூவி வாகனமான மாருதி பிரெஸ்ஸா புதிய மாற்றங்களுடன் சோதனை ஓட்டத்தில் காணப்பட்டுள்ளதால், வாகன ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : மலிவான விலையில் எலெக்ட்ரிக் கார்கள் : புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் கியா

சமீபத்தில் வெளியான ஒளிப்படங்களில், புதிய பிரெஸ்ஸா வாகனத்தில் புகை வெளியேற்ற சோதனை கருவிகள் பொருத்தப்பட்டிருந்தது கவனத்தை ஈர்த்தது. இதன் மூலம் தற்போதைய 1.5 லிட்டர் இயந்திரத்திற்கு பதிலாக குறைந்த கொள்ளளவு கொண்ட புதிய இயந்திரம் அறிமுகமாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது விற்பனையில் உள்ள பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் இயற்கை காற்றழுத்த பெட்ரோல் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்திய வரி விதிப்பில் நான்கு மீட்டருக்குள் உள்ள வாகனங்களுக்கு 1200 சிசி அல்லது அதற்கு குறைவான இயந்திரம் இருந்தால் குறைந்த வரி சலுகை கிடைக்கும். இதனால் புதிய பதிப்பில் சிறிய கொள்ளளவு கொண்ட டர்போ பெட்ரோல் இயந்திரத்தை மாருதி அறிமுகப்படுத்தலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்த மாற்றம் செயல்திறனையும் எரிபொருள் சிக்கனத்தையும் மேம்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இது அதிக மைலேஜ் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை கவரக்கூடும்.

Related Post

Latest News