இந்தியாவில் அதிக வரவேற்பைப் பெற்ற ஆஃப்-ரோடு SUV-களில் ஒன்றான மஹிந்திரா தாரின் விலையை மஹிந்திரா நிறுவனம் மீண்டும் உயர்த்தியுள்ளது. இந்த புதிய விலை மாற்றம் ஜூலை 10 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதிகபட்சமாக ரூ.37,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால், புதிய வாகனம் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் தற்போதைய விலையை சரிபார்த்து முன்பதிவு செய்வது அவசியம். இந்த விலை உயர்வு தார் மட்டுமல்லாமல், மஹிந்திரா நிறுவனத்தின் சில மற்ற SUV மாடல்களுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.
எந்த வேரியண்டுக்கு அதிக விலை உயர்வு?
இந்த முறை அதிகபட்ச விலை உயர்வு Thar LXT 4WD 2.2 லிட்டர் டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் விலை ரூ.37,000 அதிகரித்துள்ளது.
LXT 4WD பெட்ரோல் ஆட்டோமேட்டிக் – ரூ.36,000 உயர்வு
LXT 4WD 2.2 டீசல் மேனுவல் – ரூ.34,000 உயர்வு
LXT 4WD பெட்ரோல் மேனுவல் – ரூ.33,000 உயர்வு
AXT 2WD 1.5 டீசல் மேனுவல் – ரூ.32,500 உயர்வு
LXT 2WD டீசல் மேனுவல் – ரூ.29,500 உயர்வு
LXT 2WD பெட்ரோல் ஆட்டோமேட்டிக் – ரூ.27,000 உயர்வு
என பல்வேறு வேரியண்ட்களில் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mahindra Thar புதிய எக்ஸ்-ஷோரூம் விலை
Thar AXT Diesel 2WD (MT) – ரூ.10.32 லட்சம்
Thar LXT Diesel 2WD (MT) – ரூ.12.99 லட்சம்
Thar LXT Petrol 2WD (AT) – ரூ.14.76 லட்சம்
Thar LXT Petrol 4WD (MT) – ரூ.15.59 லட்சம்
Thar LXT Diesel 4WD (MT) – ரூ.16.42 லட்சம்
Thar LXT Petrol 4WD (AT) – ரூ.17.22 லட்சம்
Thar LXT Diesel 4WD (AT) – ரூ.17.99 லட்சம்
இந்த விலைகள் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே. மாநில வரிகள், காப்பீடு மற்றும் பதிவு கட்டணங்களைப் பொறுத்து ஆன்-ரோடு விலை மாறுபடும்.
2026-ல் இது மூன்றாவது விலை உயர்வு
Mahindra Thar-க்கு இந்த ஆண்டு இது முதல் விலை உயர்வு அல்ல. ஜனவரி மாதத்தில் ரூ.20,000 வரை விலையை உயர்த்திய நிறுவனம், ஏப்ரல் மாதத்தில் மீண்டும் ரூ.43,000 வரை உயர்த்தியது.
