மீண்டும் வருகிறது Jio Prime ; ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் சலுகை

ரிலையன்ஸ் ஜியோ, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய ‘Jio Prime’ உறுப்பினர் திட்டத்தை மீண்டும் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹300 செலுத்தி சேரும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் இணைய மற்றும் டிஜிட்டல் சேவைகளும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் வருகிறது ஜியோ பிரைம்

ஜியோ நிறுவனம் தனது பிரைம் உறுப்பினர் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்கள் ₹300 உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் தங்களது எண்ணை ஜியோவுக்கு மாற்றுவதன் மூலமாகவோ அல்லது புதிய ஜியோ இணைப்பை பெறுவதன் மூலமாகவோ இந்தத் திட்டத்தில் சேர முடியும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழகத்தில் BSNL 5G சேவை எப்போது? வெளியான முக்கிய தகவல்

₹299 திட்டத்தில் கூடுதல் சலுகைகள்

ஜியோவின் ₹299 முன்கட்டணத் திட்டத்திலும் கூடுதல் நன்மைகளை இணைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

இதனுடன் ஜியோஹாட்ஸ்டார் சந்தா, 5,000 ஜிபி கூகுள் கிளவுட் சேமிப்பு மற்றும் கூகுளின் ஜெமினி புரோ செயற்கை நுண்ணறிவு சேவைக்கான அணுகல் ஆகியவற்றை வழங்குவது குறித்து திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ பிரைம் திட்டத்தின் நோக்கம்

ஜியோ பிரைம் திட்டம் முதலில் நிறுவனத்தின் முதல் 10 கோடி வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 50 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட ஜியோ வாடிக்கையாளர் குடும்பத்துக்கு கூடுதல் சேவைகளையும் வழங்கும் நோக்கில் இந்த திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இலவச வை-ஃபை மூலம் உங்கள் கணக்கு திருடப்படலாம்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

ஏர்டெலுக்கு போட்டியாக ஜியோ நடவடிக்கை

பார்தி ஏர்டெல் நிறுவனம் 1.5 ஜிபி தினசரி இணையத் தரவு வழங்கிய ₹299 உள்ளிட்ட சில குறைந்த விலை முன்கட்டணத் திட்டங்களை சமீபத்தில் நிறுத்திய பின்னணியில் ஜியோவின் இந்த நடவடிக்கை வெளியாகியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் ₹299, ₹319, ₹579, ₹619 மற்றும் ₹649 ஆகிய திட்டங்களை நீக்கியுள்ளது. அதே நேரத்தில் ₹199 மற்றும் ₹219 திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

Related Post

Latest News