ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ் எப்போது? – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல தடைகளை தாண்டி கடந்த மாதம் 23ம் தேதி வெளியானது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் படத்தை திருவிழாபோல கொண்டாடி மகிழ்ந்தனர்.

எச்.வினோத் இயக்கிய இப்படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி மற்றும் நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜனநாயகன் படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ₹78.27 கோடி வசூல் செய்தது. இந்திய அளவில் ₹48.27 கோடி வசூல் செய்தது. தமிழகத்தில் மட்டும் ₹24 கோடி ரூபாய் வசூல் செய்தது.

ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ்

இதுவரை இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.227.14 கோடியும், உலகளவில் ரூ.320.34 கோடியும் வசூலித்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் ஆகஸ்ட் 21 அன்று ‘ஜீ5’ (Zee5) ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

Related Post

Latest News