கஜினி, வீரம் பட வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்

தமிழ் சினிமாவில் வலுவான வில்லன் கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென தனி இடத்தைப் பிடித்த நடிகர் பிரதீப் ராவத் காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘தொட்டி ஜெயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சூர்யா நடித்த ‘கஜினி’ திரைப்படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படம் அவரை தமிழ் ரசிகர்களிடம் மேலும் பிரபலமாக்கியது.

இதனை தொடர்ந்து ஜில்லா, வீரம், ஆம்பள உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரதீப் ராவத் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக தீவிர சிகிச்சையில் இருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலக ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

Latest News