கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் கடந்த ஜூலை 31ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.
இந்த திரைப்படத்தில் டாம் ஹாலண்ட் மீண்டும் ஸ்பைடர்-மேனாக நடித்துள்ளார். அவருடன் சென்டயா, ஜேக்கப் படலான், மார்க் ரஃபலோ, ஜான் பெர்ன்தால், சேடி சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் வெளியான இரண்டே நாட்களில் உலகம் முழுவதும் சுமார் ரூ.2,600 கோடி ($300 மில்லியன்) வசூல் செய்துள்ளது. இது 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய வசூல் செய்த படமாகும்.
இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ₹60 கோடி, இரண்டாவது நாளில் ₹49 கோடி என மொத்தம் ரூ.109 கோடி வசூல் செய்துள்ளது. வார இறுதி நாட்களில் அதிக பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்பதால், வசூல் மேலும் அதிகரிக்கும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
