பாக்யராஜ் செய்த அந்த ஒரு தவறு! : கவுண்டமணி பெயருக்குப் பின்னால் இப்படி ஒரு சுவாரசியமா..!

தமிழ் திரையுலகில் “திரைக்கதை மன்னன்” கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவருக்கும் தமிழ் சினிமாவின் லெஜண்டரி நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கும் இடையே இருந்த ஒரு சுவாரசியமான வரலாற்றுப் பின்னணி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்று நாம் ரசித்துக்கொண்டிருக்கும் ‘கவுண்டமணி’ என்ற பெயருக்குப் பின்னால் இயக்குநர் பாக்யராஜ் செய்த ஒரு தவறு ஒளிந்திருக்கிறது.

‘கவுண்டர் மணி’ எப்படி ‘கவுண்டமணி’ ஆனார்?

ஆரம்பகாலத்தில் நாடக மேடைகளில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் மணி. மேடைகளில் சக நடிகர்கள் பேசும் வசனங்களுக்கு உடனுக்குடன் மிகச் சாதுரியமாக ‘கவுண்டர்’ (Counter) கொடுப்பதில் அவர் திறமையானவர். இதனால், நாடக உலகிலும் திரையுலக வட்டாரத்திலும் அவர் அன்போடு ‘கவுண்டர் மணி’ என்றே அழைக்கப்பட்டு வந்தார்.

பாக்யராஜ் செய்த தவறு

பாக்யராஜ், தனது திரைப்பயணத்தின் தொடக்கத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு திரைப்படத்தின் டைட்டில் கார்டில் ‘கவுண்டர் மணி’ என்ற பெயரைத் திரையில் எழுதுவதற்காக பதிலாக தவறுதலாக ‘கவுண்டமணி’ என்று டைட்டிலில் குறிப்பிட்டுவிட்டார்.

அதன் பின்னர், ‘கவுண்டர் மணி’ என்ற அடைமொழி மறைந்து, ‘கவுண்டமணி’ என்ற பெயரே அவரது நிரந்தரத் திரை அடையாளமாக மாறிப்போனது. தமிழ் சினிமாவின் மாபெரும் நகைச்சுவை சகாப்தமாக மாறிய அந்தப் பெயருக்குப் பின்னால் பாக்யராஜின் இந்த சுவாரசியமான பிழை இருந்தது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Related Post

Latest News