மாருதி கிராண்ட் விட்டாரா வாங்க அருமையான வாய்ப்பு: ரூ.3 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடுத்தர வகை எஸ்யூவி (SUV) கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர் மாடலுக்கு போட்டியாக களம் இறங்கி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த காரை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஜூலை மாத சலுகையாக சுமார் 3 லட்சம் ரூபாய் வரை பலன்களை மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.

16 முதல் 18 கி.மீ வரை மைலேஜ்

இந்த கார் லிட்டருக்கு 21.11 கி.மீ மைலேஜ் தரும். எனினும், அன்றாட போக்குவரத்து நெரிசல் மற்றும் நிஜ உலகப் பயன்பாட்டில் இது லிட்டருக்கு 16 முதல் 18 கி.மீ வரை மைலேஜ் தருவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். கார் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா. சிறந்த வடிவமைப்பு, நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறப்பான மைலேஜ் ஆகிய காரணங்களால் இந்தியாவின் முன்னணி ஹைப்ரிட் காராக இது வலம் வருகிறது.

இதையும் படிங்க : சொதப்பிய AI., மீண்டும் இன்ஜினியர்களை களமிறக்கிய ஃபோர்டு நிறுவனம்

மாருதி கிராண்ட் விட்டாராவில் உள்ள வசதிகள்

மாருதி கிராண்ட் விட்டாரா கார் மாடலானது பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் என மூன்று விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப மேனுவல், ஆட்டோமேட்டிக் மற்றும் e-CVT கியர்பாக்ஸ் தேர்வுகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

3 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி

தற்போது இந்த காரை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஜூலை மாத சலுகையாக சுமார் 3 லட்சம் ரூபாய் வரை பலன்களை மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், மிகக் குறைந்த மாதாந்திர தவணையிலும் (EMI) இக்காரை வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளலாம்.

இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.77 லட்சத்தில் தொடங்கி, ரூ.19.72 லட்சம் வரை உள்ளது. இதன் ஆரம்ப நிலை ‘சிக்மா’ வேரியண்டின் ஆன்-ரோடு விலை ரூ.13.41 லட்சமாக வருகிறது. இதில் சாலை வரி, காப்பீடு மற்றும் இதர பதிவு கட்டணங்கள் அடங்கும்.

Related Post

Latest News