டீசல் விலை உயர்வு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் சரக்கு கட்டணத்தை 4 சதவீதம் உயர்த்த போக்குவரத்து சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக டீசல் விலை பெரிய மாற்றமின்றி இருந்ததால், சரக்கு கட்டணங்கள் உயர்த்தவில்லை. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள திடீர் விலை உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஜூன் 1 முதல் பால் விலை உயர்வு: லிட்டருக்கு ரூ.4 உயர்கிறது
இந்த கட்டண உயர்வு காரணமாக காய்கறி, மளிகை, கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கக்கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு இது கூடுதல் சுமையாக மாறும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
