வணிக சிலிண்டர் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு

அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு விலையை நிர்ணயிக்கும் எண்ணெய் நிறுவனங்கள், இந்த மாதமும் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.46 உயர்ந்து ரூ.3,283 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது ஒரு வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.928.50 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Post

Latest News