சவப்பெட்டியில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி ; துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் சோகம்

புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே உள்ள காக்கையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த பழனி (49) என்பவர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது இறுதிச்சடங்கிற்காக உடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. உடலைப் பாதுகாப்பதற்காக மின்சாரத்தால் இயங்கும் பிரீசர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டது.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி (75) என்ற மூதாட்டி மற்றொருவருடன் துக்கம் விசாரிக்க வந்துள்ளார். அஞ்சலி செலுத்துவதற்காக அவர்கள் இருவரும் பிரீசர் பாக்ஸ் மீது கை வைத்தபோது, அதில் பாய்ந்த மின்சாரம் இருவரையும் தூக்கி வீசியது.

மின்சாரம் தாக்கிப் பலத்த காயமடைந்த ராஜாத்தி மற்றும் அவருடன் இருந்தவரை உடனடியாக மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மூதாட்டியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

காயமடைந்த மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

Latest News