வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : தாமதித்தால் என்ன நடக்கும்?

வருமான வரி தாக்கல் செய்வதற்கான முக்கிய காலக்கெடு இன்றுடன் (ஜூலை 31) நிறைவடைகிறது. தாமதித்தால் பல்வேறு நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். குறிப்பாக மூலதன இழப்பு மற்றும் சில வணிக இழப்புகள் ஏற்படலாம். இது எதிர்கால வரிக் கணக்கீட்டில் நிதி சுமையை அதிகரிக்கக்கூடும்.

வருமான வரித்துறையின் சமீபத்திய தகவலின்படி, 2026-27 மதிப்பீட்டு ஆண்டுக்காக ஏற்கனவே 5 கோடிக்கும் அதிகமான வருமான வரி ரிட்டர்ன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இறுதி நாளில் e-Filing இணையதளத்தில் அதிக நெரிசல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனடியாக தாக்கல் செய்யுமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

காலக்கெடுவை தவறவிட்டால் என்ன பாதிப்பு?

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் – ரூ.1,000 தாமதக் கட்டணம்.
ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் – ரூ.5,000 வரை தாமதக் கட்டணம்.
அடிப்படை வரி விலக்கு வரம்பிற்குக் குறைவான வருமானம் இருந்தால் பொதுவாக தாமதக் கட்டணம் விதிக்கப்படாது.

e-Verification செய்வது முக்கியம்

தாக்கல் செய்யப்பட்ட ரிட்டர்னை Aadhaar OTP, Net Banking அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிற முறைகள் மூலம் e-Verification செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் e-Verification செய்யப்படாத ரிட்டர்ன் செல்லுபடியாகாததாக கருதப்பட வாய்ப்பு இருப்பதால், இந்த கட்டத்தை மறக்காமல் நிறைவு செய்வது அவசியம்.

Related Post

Latest News