வேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த இருவரைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 3 வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
காட்பாடி மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டுப்போவதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து, காவல்துறையினர் நேற்று நள்ளிரவு காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் எதிரே தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க : ஆகஸ்ட் 1 முதல் தபால் கட்டணத்தில் மாற்றம்.. புதிய கட்டண விவரம் வெளியீடு!
அப்போது, அவ்வழியாகச் சந்தேகத்திற்கு இடமான வகையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டனர். அவர்களிடம் வாகனத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.இதனால், சந்தேகமடைந்த காவல்துறையினர் இருவரையும் பிரம்மபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஆதித்யன் (17) மற்றும் வடபழனியைச் சேர்ந்த சஞ்சய் (19) என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
