மது போதையில் தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன் கைது

வேலூரில், மது போதையில் தந்தையைக் கத்தியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், சலவன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (70). தச்சுத் தொழிலாளியான இவருக்கு, சக்திவேல் (40) என்ற மகன் உள்ளார். தந்தை, மகன் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று இருவரும் ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், தனது தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்குக் காவல்துறையினர், சந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த சக்திவேலைக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Post

Latest News