மின்சார வாகனச் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கியா சைரோஸ் ஈவி எலக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் மொத்தம் 7 வேரியண்ட்கள் மற்றும் 2 பேட்டரி தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார் மொத்தம் 9 விதமான கவர்ச்சிகரமான நிறங்களில் சந்தைக்கு வருகிறது.
இதன் ஆரம்ப விலை ரூ. 13.50 லட்சம் ஆகும். இதனுடைய வேகம், பூஜ்ஜியத்திலிருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 8.1 வினாடிகளில் எட்டிவிடும். 100 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 10% முதல் 80% வரை வெறும் 39 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும். ஒரு முறை முழுமையாகச் சார்ஜ் செய்தால் 443 கி.மீ வரை பயணிக்கும் வசதியை வழங்குகிறது.
வடிவமைப்பு மற்றும் பிரீமியம் உட்புற அம்சங்கள்
வெளிப்புறம்: ‘Ice Cube’ LED ஹெட்லைட்கள், ‘Star Map’ DRLகள், ஆட்டோ-ஃப்ளஷ் கதவு கைப்பிடிகள் மற்றும் 17-அங்குல அலாய் சக்கரங்கள்.
உட்புறம் (Interior): 30-அங்குல டிரினிட்டி பனோரமிக் டிஸ்ப்ளே (12.3-அங்குல கிளஸ்டர், 12.3-அங்குல இன்ஃபோடெயின்மென்ட் & 5-அங்குல கிளைமேட் கண்ட்ரோல் திரை).
கூடுதல் வசதிகள்: பனோரமிக் சன்ரூஃப், ஹார்மன் கார்டன் 8-ஸ்பீக்கர் சிஸ்டம், காற்றோட்ட வசதியுள்ள (Ventilated) முன்பின் இருக்கைகள் மற்றும் 95-க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் அம்சங்கள்.
கியா சைரோஸ் ஈவி-யின் வருகை, இந்தியாவில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் டாடா நெக்ஸான் ஈவி (Tata Nexon EV), எம்.ஜி வின்ட்சர் ஈவி (MG Windsor EV) மற்றும் மஹிந்திரா XUV 3XO ஈவி போன்ற கார்களுக்கு மிகப்பெரிய போட்டியாக உருவெடுத்துள்ளது.
