நேற்று தங்கம் மற்றும் வெள்ளி விலை யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியாகக் குறைந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிப்பதற்குள் இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம், அதன் பின்னணி குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.
இன்று தங்கம் விலை எவ்வளவு?
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கு விற்பனையாகிறது.
நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 வரை குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது நகைப் பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், கடந்த வார விலையோடு ஒப்பிடுகையில் இது ஓரளவுக்குக் குறைவான விலையே ஆகும்.
வெள்ளி விலையும் அதிகரிப்பு
இன்று வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.5,000 உயர்ந்து, தற்போது ரூ.2,35,000-க்கு விற்பனையாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.10,000 வரை குறைந்திருந்த வெள்ளி, இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது.
