சமீபகாலமாகத் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் சூழலில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தங்கம் விலை கற்பனை செய்ய முடியாத ஒரு புதிய உச்சத்தைத் தொடும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தங்கம் விலை தொடர்ந்து உயர்வதற்கான காரணங்கள்
நாளுக்கு நாள் சர்வதேச அளவில் பணத்தின் மதிப்பு பணவீக்கத்தால் குறைந்து வருகிறது. ஆனால், தங்கம் வரலாற்று ரீதியாகத் தனது மதிப்பை எப்போதுமே இழக்காமல் தக்கவைத்துக் கொள்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பூமியிலிருந்து தங்கத்தைச் சுரங்கங்கள் மூலம் வெட்டி எடுப்பதற்கான செலவுகள் அதிகரித்து வருகின்றன. புதிய தங்கச் சுரங்கங்கள் கண்டறியப்படுவதும் குறைந்துவிட்டது. இதனால் வரத்து குறைந்து தேவை அதிகரிப்பதால் விலை உயர்கிறது.
இதையும் படிங்க : வேகவேகமாக தங்கத்தை வாங்கி குவிக்கும் உலக நாடுகள்., காரணம் இதுதான்..!
2030-இல் தங்கத்தின் விலை
தற்போதைய உலகப் பொருளாதாரச் சூழல் மற்றும் சந்தை நகர்வுகளை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது அடுத்த சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை தற்போதைய நிலவரத்தை விட இரண்டு மடங்கு வரை உயரக்கூடும் என எச்சரிக்கின்றனர்.
அதன்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் 1 கிராம் தங்கம் ரூ.30,000 என்ற எல்லையைத் தொடலாம். 1 சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.2,40,000 ஆகவும் இருக்கும். இத்தகைய விலை உயர்வு நடுத்தரக் குடும்பத்தினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தும்.
முதலீட்டாளர்களுக்கான நிதி நிபுணர்களின் ஆலோசனை
2030-ஆம் ஆண்டில் தங்கம் விலை இந்த அளவுக்கு உயரும் என்பதை யாராலும் உறுதியாகக் சொல்ல முடியாது. இருப்பினும், தங்கம் சாமானியர்களுக்கு எட்டா கனியாக மாறுவதற்கு முன்பாகவே, இப்போதிருந்தே சிறுகச் சிறுகத் தங்கத்தில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனமான நடவடிக்கை என்று நிதி நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
