நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தவெகவில் ஐக்கியம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் இணையும் பிரம்மாண்ட விழா இன்று நடைபெற்றது. த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் முக்கிய பிரமுகர்கள் பலர் தங்களை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டனர்.

அதிமுகவில் பணியாற்றி வந்த பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்.வி.உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் ஆகியோர் இன்று தங்களை த.வெ.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.

கட்சியில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது : “தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக விஜய் இருப்பது உறுதி, அவரது கரத்தை வலுப்படுத்தவே கட்சியில் இணைந்துள்ளேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

முன்னதாக, அதிமுகவை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் எனப் பலரும் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

Related Post

Latest News