இனி ரயிலில் இதையெல்லாம் செய்தால் ரயிலில் இருந்து உடனடியாக இறக்கிவிடப்படுவார்கள்!

ரயில் டிக்கெட் மற்றும் ரயில் பயணிகள் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான சில புதிய விதிமுறைகள் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளன. டிக்கெட் இல்லாமல் பயணிப்பதற்கான குறைந்தபட்ச அபராதத் தொகையை 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக ரயில்வே அமைச்சகம் அதிரடியாக உயர்த்தியுள்ளது.

நேர்மையாக டிக்கெட் எடுத்து பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பையும், வசதியையும் உறுதி செய்யவே இந்த அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் விளக்கியுள்ளது.

மாற்று நபர் டிக்கெட்டில் பயணித்தால் ஆபத்து

வேறு ஒருவர் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் பயணிப்பது கண்டறியப்பட்டால், அந்த டிக்கெட் பறிமுதல் செய்யப்படும். அதோடு, பயணியிடமிருந்து முழு கட்டணமும், கூடுதலாக 500 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும். அபராதம் செலுத்த மறுத்தால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துமீறி பொருள் விற்பனை செய்தால் சிறை:

அனுமதி இல்லாமல் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தத் தவறினால் 3 மாத சிறைத்தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.

பிச்சை எடுப்போர், குடிகாரர்களுக்கு கிடுக்கிப்பிடி:

ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் பிச்சை எடுப்பவர்கள் மீது இனி கடுமையான நடவடிக்கை பாயும். அதேபோல், ரயில்வே வளாகத்திலோ அல்லது ரயில்களிலோ மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொள்பவர்கள், பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் ரயிலில் இருந்து உடனடியாக இறக்கிவிடப்படுவார்கள்.

Related Post

Latest News