இளைஞர்கள் ஆதரவுடன் தவெகவில் இணைந்தார் கே.கே.ஆர். வெங்கடேஷ்; திண்டுக்கலில் அரசியல் பரபரப்பு

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் மாநகரில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திரு. கே.கே.ஆர். வெங்கடேஷ், B.A., LL.B. (Hons.). அரசியல் ஆர்வம், சமூக அக்கறை மற்றும் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக மட்டுமல்லாமல் பலராலும் திண்டுக்கல் பகுதியில் கவனிக்கப்பட்டவர். இளைஞர்களின் ஆதரவை பெற்றுள்ள இவர், இதுவரை திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளராக செயல்பட்டு வந்தார்.

தற்போது, அந்த பொறுப்பிலிருந்து விலகி, தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களை தலைவராக ஏற்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளாலும் மக்கள் நல சேவையால் ஈர்க்கப்பட்டு, அதன் வளர்ச்சிப் பயணத்தில் பங்கெடுத்து மக்கள் பணியாற்றும் நோக்கில், திரு. கே.கே.ஆர். வெங்கடேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் முழுமையாக இணைந்துள்ளார்கள் .

20.06.2026 (சனிக்கிழமை) காலை, பணையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் திரு என். ஆனந்த் அவர்கள் மற்றும் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் திரு ஆதவ் அர்ஜுன் அவர்களின் முன்னிலையில் தவெக கட்சியில் இணைந்துள்ளார்.

Related Post

Latest News