முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விஜய் மற்றும் சங்கீதா கடந்த 1999-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள், தனிப்பட்ட காரணங்களால் சில காலமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை ஏற்கனவே பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் விசாரணையில் முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா நேரில் ஆஜராவார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில், விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Post

Latest News