சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 உயர்வு

இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை சரிவை சந்தித்து வந்தது. குறிப்பாக ஜூன் 11-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,000 என்ற அளவுக்கு குறைந்ததால், விலை மேலும் குறையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.60 உயர்ந்து ரூ.13,860-க்கும், ஒரு சவரன் ரூ.480 உயர்ந்து ரூ.1,10,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை மேலும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ரூ.14,070 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,680 அதிகரித்து ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.10 அதிகரித்து ரூ.280-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 உயர்ந்து ரூ.2,80,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Post

Latest News