ஒரே நாளில் மீண்டும் ஏறிய தங்கம் விலை! – நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.560 மற்றும் சவரனுக்கு ரூ.4,480 வரை குறைந்திருந்தது. இதனால் நகை வாங்குவோரிடம் மகிழ்ச்சி நிலவியது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.130 அதிகரித்து ரூ.14,200 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,040 உயர்ந்து ரூ.1,13,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து நான்காவது நாளாக ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Post

Latest News