இனி இவர்களுக்கு வங்கி லோன் கிடைப்பது கடினம்.. RBI புதிய விதி!

வங்கி கடன் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. குறிப்பாக CIBIL ஸ்கோர் 730-க்கும் குறைவாக இருப்பவர்கள், 2027 ஏப்ரல் 1-ம் தேதி முதல் வீட்டு கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் பெறுவதில் புதிய சவால்களை சந்திக்க நேரிடலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிமுகப்படுத்த உள்ள Expected Credit Loss என்ற புதிய விதிமுறையால், கடன் வழங்கும் நடைமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. வங்கிகள் இனி கடன் வாங்குபவரின் தற்போதைய நிலையை மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் அவர் கடனை திருப்பிச் செலுத்தாமல் போகும் அபாயத்தையும் முன்கூட்டியே கணக்கிட வேண்டியிருக்கும்.

தற்போது கடன் வாராக்கடனாக மாறிய பிறகே வங்கிகள் இழப்பீட்டு நிதியை ஒதுக்குகின்றன. ஆனால் ECL விதிமுறையின் கீழ், கடன் வழங்கும் தருணத்திலேயே எதிர்கால ஆபத்துக்காக வங்கிகள் நிதியை ஒதுக்கி வைக்க வேண்டும். இதனால் வங்கிகளின் லாபத்தில் கணிசமான தாக்கம் ஏற்படலாம் என்று நிதி நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிதிச் சுமையை சமாளிக்க, வங்கிகள் கடன் வழங்கும் விதிகளை கடுமையாக்கும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக CIBIL ஸ்கோர் 730-க்கும் குறைவாக உள்ள விண்ணப்பதாரர்கள் அதிக ஆபத்து கொண்டவர்களாக கருதப்படலாம். இதன் விளைவாக, கடன் விண்ணப்பங்கள் கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம். மேலும், சிலருக்கு அதிக வட்டி விகிதம் விதிக்கப்படலாம். கூடுதல் அடமானம் கேட்கப்படலாம். சில சந்தர்ப்பங்களில் கடன் விண்ணப்பம் நேரடியாக நிராகரிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

இதனால், தினக்கூலி தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஒழுங்கற்ற வருமானம் கொண்டவர்கள் மற்றும் முதல் முறையாக கடன் பெற முயற்சிப்பவர்கள். இவர்கள் பலருக்கும் நீண்டகால கடன் வரலாறு இல்லாததால், வங்கிகளின் புதிய மதிப்பீட்டு முறையில் சவால்கள் உருவாகலாம்.

நிபுணர்கள் கூறுவதன்படி, இந்தியாவில் கடன் விண்ணப்பிப்பவர்களில் பெரும்பாலானோரின் CIBIL ஸ்கோர் 730-க்கும் குறைவாக உள்ளது. எனவே இந்த மாற்றம் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கக்கூடியதாக இருக்கலாம்.

எனவே எதிர்காலத்தில் எளிதாக வங்கி கடன் பெற விரும்புபவர்கள் இப்போதே தங்களது CIBIL ஸ்கோரை மேம்படுத்துவது அவசியம். EMI-களை சரியான நேரத்தில் செலுத்துதல், கிரெடிட் கார்டு நிலுவைகளை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், தேவையற்ற கடன்களை தவிர்த்தல் போன்ற பழக்கங்கள் நல்ல கிரெடிட் வரலாற்றை உருவாக்க உதவும்.

2027 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த புதிய ECL விதிமுறை, இந்தியாவின் கடன் வழங்கும் முறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக பார்க்கப்படுகிறது.

Related Post

Latest News