அதிமுக முன்னாள் அமைச்சர்கள் த.வெ.க.வில் ஐக்கியம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற அக்கட்சி, பல இடங்களில் டெபாசிட் இழந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்து வருவதால் அதிமுகவுக்குள் அதிருப்தி அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

மறுபுறம், முதல் முறையாக தனித்து போட்டியிட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இதனைத் தொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கினர்.

இதையும் படிங்க : வங்கி கணக்கில் கிரெடிட் ஆன ரூ.294 கோடி! அதிர்ச்சியில் உறைந்த பீகார் தொழிலாளி

அதிமுகவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படுகிறது. மேலும், நான்கு அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர்களான எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்து, கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோர் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருவது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

Latest News