வங்கி கணக்கில் கிரெடிட் ஆன ரூ.294 கோடி! அதிர்ச்சியில் உறைந்த பீகார் தொழிலாளி

பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தைச் சேர்ந்த விகாஸ் குமார் என்ற இளைஞர் குழாய் பழுதுபார்க்கும் பணியிலும் மின்சாரப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். மாதம் பத்தாயிரம் முதல் பன்னிரெண்டாயிரம் ரூபாய் வரை மட்டுமே வருமானம் பெறும் அவரது கணக்கில் சுமார் 294.80 கோடி ரூபாய் கிரெடிட் ஆகி உள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அவர், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் இணைய குற்றப்பிரிவு மற்றும் உள்ளூர் காவல்துறையிடமும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் வங்கியின் தொழில்நுட்பப் பிழையா அல்லது வேறு ஏதேனும் நிதி முறைகேட்டின் விளைவா என்பதை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பரிவர்த்தனை பதிவுகள், கணக்கு விவரங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் அனைத்தும் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Post

Latest News