தமிழக அரசு பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட குறுகிய கால நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த உத்தரவு ஏற்கனவே கடந்த மே 13ஆம் தேதி அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (மே 22) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் மாநிலங்களவை இடைத்தேர்தல் : த.வெ.க. போட்டியிடுமா?
அதன்படி, ஊரக வளர்ச்சி, போக்குவரத்து, பொதுப்பணி, மின்சாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்த குறுகிய கால டெண்டர்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த குறுகிய கால டெண்டர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும், ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அனுமதிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
