தமிழ்நாட்டில் காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதே போல நாடு முழுவதும் 10 மாநிலங்களில் காலியாகும் 24 மாநிலங்களவை இடங்களுக்கும் அதே நாளில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க : கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய விஜய், இப்போது முதல்வராக வாங்கும் சம்பளம் எவ்வளவு?
மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 1 அன்று தொடங்கி, ஜூன் 8 வரை நடைபெற உள்ளது. மனுக்கள் பரிசீலனை ஜூன் 9 அன்று முடிவடையும் நிலையில், ஜூன் 11 வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். வாக்குப்பதிவு ஜூன் 18 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
