சென்னையில் கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வந்த தங்கம் விலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது.
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 வரை சரிந்தது. இதனை தொடர்ந்து இன்றும் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,18,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.14,750 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.15 குறைந்து ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.15 ஆயிரம் குறைந்து ரூ.2.90 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
