நாடு முழுவதும் அமுல் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரித்ததாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
குஜராத் அரசின் கூட்டுறவு அமைப்பின் கீழ் செயல்படும் அமுல் நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய பால் விநியோக நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்நிலையில், இன்று முதல் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணமாக உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே காய்கறி, சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் செலவுகள் உயர்ந்துள்ள நிலையில், பால் விலை உயர்வும் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது.
