புதிய வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் டவுன்லோடு செய்யலாம். எப்படி தெரியுமா?

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.

இந்நிலையில், வாக்காளர் அடையாள அட்டை பழையதாகவோ அல்லது சேதமடைந்ததாகவோ இருந்தால், அதை புதியதாக மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வாக்காளர்கள் புதிய டிஜிட்டல் வாக்காளர் அட்டையை ஆன்லைன் மூலமாகவே எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.

அதற்கு, voters.eci.gov.in/login என்ற இணையதளத்திற்கு சென்று, தங்களது வாக்காளர் அடையாள எண் (Voter ID) எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர், மொபைல் எண்ணுக்கு வரும் ஒடிபி (OTP) எண்ணை பதிவு செய்தால், புதிய டிஜிட்டல் அட்டையை உடனடியாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 வகையான அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டியும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

RELATED NEWS

Latest News