சுந்தர் பிச்சையின் சம்பளம் ரூ.6,300 கோடியாக உயர்வு

அமெரிக்காவின் ஆல்பபெட் குழுமத்தின் துணை நிறுவனமான கூகுளில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை 2004ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். கூகுளின் குரோம் மற்றும் ஆன்ட்ராய்ட் போன்ற முக்கிய தயாரிப்புகளை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு அவர் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (CEO) பொறுப்பேற்றார். சுந்தர் பிச்சை CEO ஆக பதவி ஏற்ற பிறகு, கூகுள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 535 பில்லியன் டாலரிலிருந்து 3.6 டிரில்லியன் டாலராக வேகமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், சுந்தர் பிச்சையின் மொத்த சம்பளத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 692 மில்லியன் டாலராக (சுமார் ரூ.6,300 கோடி) உயர்த்த கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே அதிக சம்பளம் பெறும் CEO என்ற பெருமையை சுந்தர் பிச்சை பெற்றுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO சத்ய நாதெல்லா சுமார் 96.5 மில்லியன் டாலர் சம்பளம் பெறுகிறார். அதேபோல், ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் சுமார் 74.3 மில்லியன் டாலர் சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS

Latest News