தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக, பள்ளிகள் திறப்பதை ஒரு வார காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 4ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி பள்ளிகளின் திறப்பு தள்ளிவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
