வருகின்ற செப்டம்பர் 8 முதல், ஆண்ட்ராய்டு 6.0-க்கு முந்தைய பதிப்பு இயங்குதளங்களில் வாட்ஸ்ஆப் செயல்பாடுகளை நிறுத்த மெட்டா நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 இயங்குதளம் கொண்ட ஆண்ட்ராய்டு போன்கள் வருகின்ற செப். 8 முதல் வாட்ஸ்ஆப் செயலி இயங்காது.
இதையும் படிங்க : ஸ்மார்ட்போன்களில் மீண்டும் வருகிறது ‘Removable Battery’ வசதி
இதுதொடர்பான அறிவிப்புகள் ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 இயங்குதளம் கொண்ட போன்களில் காட்டத் தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பயனர்கள் தங்களின் தரவுகளை பேக்கப் எடுத்து கூகிள் டிரைவ் போன்றவற்றில் சேமித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம், இந்தியா, பிரேசில், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் பழைய வகை ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் குறைந்த அளவிலான பயனர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள்.


