ஸ்மார்ட்போன்களில் மீண்டும் வருகிறது ‘Removable Battery’ வசதி

தற்போது விற்பனை செய்யப்படும் பல ஸ்மார்ட்போன்களில் பேட்டரி உள்ளே பொருத்தப்பட்டிருப்பதால், அது சேதமடைந்தால் வேறொரு புதிய மொபைலை வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் தேவையற்ற செலவுகளும் அதிகரிக்கிறது.

‘Removable Battery’ வசதி மீண்டும் வந்தால், பயனர்கள் பேட்டரியை எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இது மொபைலின் ஆயுளை அதிகரிப்பதோடு, தேவையற்ற செலவையும் குறைக்கும். மேலும், சிறிய பழுதுகளுக்காக முழு போனையும் மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படாது.

இந்த சூழலில் 2027ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளிலும் ‘Removable Battery’ வசதி கட்டாயமாக இருக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் (EU) புதிய தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த புதிய விதி 2027 முதல் உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News