‘என்னோட முகத்தை திருடியிருக்காங்க’.. அவதார் படத்திற்கு எதிராக நடிகை வழக்கு

உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்த ‘அவதார்’ திரைப்படம் தற்போது புதிய பிரச்சனையை சந்தித்துள்ளது. இந்த படத்தில் வரும் நெய்திரி கதாபாத்திரத்தின் தோற்றம் தனது முக அமைப்பை போல இருப்பதாக கூறி பிரபல ஹாலிவுட் நடிகை கொரியன்கா கில்ச்சர், வழக்கு தொடர்ந்துள்ளார்.

தனது அனுமதி இல்லாமல் முக அம்சங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ள நடிகை, திரைப்படத்தின் மிகப்பெரிய வருமானத்தில் தனக்கும் உரிமை இருப்பதாக வாதிட்டுள்ளார்.

ஹாலிவுட்டில் கலைஞர்களின் உருவம், காப்புரிமை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பு தொடர்பான விவாதங்கள் மீண்டும் இந்த வழக்கின் மூலம் பேசுபொருளாகியுள்ளன. குறிப்பாக, டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலில், நடிகர்களின் தோற்ற உரிமை குறித்து புதிய கேள்விகள் எழுந்துள்ளன.

Related Post

Latest News