108 இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க. பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தி.மு.க. வெளியில் இருந்து அதிமுகவுக்கு ஆதரவு தர வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி கைது
இந்த சூழலில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே உயர்மட்ட அளவில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. கட்சியின் மூத்த தலைவர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது.
த.வெ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அ.தி.மு.க.வுக்கு வெளியில் இருந்து தி.மு.க. ஆதரவு அளிக்க முடிவு என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இணைந்தால் மொத்த எண்ணிக்கை 121 ஆக இருக்கும்.
மொத்தத்தில் யார் ஆட்சியமைப்பார்கள், எந்த கட்சி யாருக்கு ஆதரவு தரும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக அரசியல் களம் பரபரப்பாக காத்திருக்கிறது.


