மேற்கு வங்க சட்டசபை தேர்தல் : நாளை 2ஆம் கட்ட வாக்குப்பதிவு

மேற்கு வங்காளத்தில் மொத்தம் 294 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கான தேர்தல் தற்போது இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 23ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நாளை 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதையும் படிங்க : கட்சி மாறிய எம்.பி.க்கள் : மாநிலங்களவையில் பாஜகவின் பலம் உயர்வு

மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும். வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 4ஆம் தேதி எண்ணப்பட்டு, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Latest News