ஆம் ஆத்மி கட்சியின் 7 மேல்சபை எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததை மேல்சபை தலைவர் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். இதனால் பாஜகவின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பலம் 3 ஆக குறைந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஏழு மேல்சபை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த ஏழு எம்.பி.க்கள் தங்களை பாஜக உறுப்பினர்களாக அங்கீகரிக்க வேண்டுமென மேல்சபை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்திருந்தனர். அதே நேரத்தில் கட்சி மாறிய 7 எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி மனு அளித்திருந்தது.
இதையும் படிங்க : மது பாட்டிலுக்காக போராடிய நபர்., நீதிமன்றம் வரை சென்ற பிரச்சனை. என்ன நடந்தது?
இரு தரப்பினரின் கோரிக்கைகளையும் ஆய்வு செய்த பிறகு, மேல்சபை தலைவர் அதிகாரப்பூர்வமாக இந்த இணைப்பை ஏற்றுக்கொண்டார். இதனால், ராஜ்யசபாவில் பாஜகவின் எண் 113 ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம், ஆம் ஆத்மி கட்சியின் பலம் வெறும் 3 ஆக குறைந்துள்ளது.


