வேளச்சேரி – பரங்கிமலை இடையே நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் சேவை இன்று அதிகாலை முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் கடற்கரை – பரங்கிமலை இடையே இரு மார்க்கங்களிலும் மொத்தம் 86 ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் கடற்கரை – வேளச்சேரி இடையே இரு மார்க்கங்களிலும் 4 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் பரங்கிமலை – வேளச்சேரி இடையே இரு மார்க்கங்களிலும் 6 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மொத்தம் 96 ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளன.
ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் மட்டும் தற்போது ரயில்கள் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் இந்த சேவை முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
