‘முந்தைய ஆட்சியை குறை சொல்லாமல் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துங்கள்’ – அன்பில் மகேஷ்

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது :

“திருச்சியில் 17 வயது மாணவி பாலியல் வன்கொடுமை” எனும் செய்தியைக் கேட்கும்போதே மனம் நடுங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

ஆளும் அரசின் முதலமைச்சர் உடனடியாகத் தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டும். மீண்டும் முந்தைய ஆட்சியை குறை சொல்லி, ஆக்ரோஷமாகப் பேசி மக்களைத் திசைதிருப்பாமல் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துங்கள். ஆரோக்கியமான நடவடிக்கை எடுத்தால் எதிர்க்கட்சி பாராட்டவும் செய்யும்.

குற்றவாளிகள் சட்டத்தின்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மாணவிகள் மற்றும் பெண்களின் வருங்கால நம்பிக்கைக்கும் அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Post

Latest News