முன்னாள் கியூபா தலைவர் மீது வழக்குத் தொடர அமெரிக்கா திட்டம்

கியூபாவின் முன்னாள் தலைவர் ராவுல் மொடெஸ்டோ காஸ்ட்ரோ மீது அமெரிக்க நீதித்துறை மிகப்பெரிய நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1996ம் ஆண்டு நடந்த விமானத் தாக்குதல் சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த வழக்கு உருவாகியுள்ளது.

1996 ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி, அமெரிக்காவின் இரண்டு சிறிய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர். கியூபா அரசு அந்த அமைப்பு தனது வான்வெளியை மீறியதாக கூறியிருந்தாலும், சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் விசாரணை அந்த சம்பவம் சர்வதேச கடல் எல்லைக்கு மேல் நடைபெற்றதாக கூறியது.

இந்நிலையில், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் கியூபாவுக்கு எதிரான பொருளாதார மற்றும் எரிபொருள் தடைகளை மேலும் கடுமையாக்கியுள்ளது. ஏற்கனவே எரிபொருள் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கியூபா, தற்போது பொருளாதார நெருக்கடியின் மிக மோசமான கட்டத்தை சந்தித்து வருகிறது.

அதே நேரத்தில், அமெரிக்க உளவுத்துறை அமைப்பின் தலைவர் ஜான் ராட்க்ளிஃப் ஹவானாவில் கியூபா அதிகாரிகளை சந்தித்தது உலக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரிக்கும் சூழலில் நடந்ததால், பல்வேறு அரசியல் யூகங்கள் உருவாகியுள்ளன.

Related Post

Latest News