பிலிப்பைன்ஸ் நாட்டின் லெய்தி மாகாணத்தில் உள்ள டாக்லோபன் நகரின் ‘சான் ஜோஸ்’ தேசிய மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை (ஜூன் 22) காலை 9 மணியளவில் அரங்கேறிய துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுவர்களிடமிருந்து இரண்டு பிஸ்டல் ரகத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு சிறுவன் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, அந்தப் பிராந்தியத்தில் பணியாற்றும் ஒரு பெண் போலீஸ் அதிகாரிக்குச் சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்தப் பெண் போலீசும் கைது செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில், வகுப்பறைக்குள் இருந்த சிறுவர்கள் பயத்தில் அலறித் துடித்தபடி பதுங்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
