புகைபிடித்தலால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை குறைக்கும் நோக்கில், இங்கிலாந்து அரசு ஒரு முக்கியமான சட்ட மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய சட்டத்தின் முக்கிய அம்சம் என்னவெனில், 2009 ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது. மேலும், தற்போது 17 வயது மற்றும் அதற்கு குறைவானவர்களுக்கு சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இளம் வயதிலேயே புகைபிடிக்கும் பழக்கத்தைத் தொடங்குவதைத் தடுக்க முடியும் என நம்பப்படுகிறது. இந்த சட்டம் உலகளவில் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. புகையிலை பயன்பாட்டை படிப்படியாகக் குறைத்து, எதிர்காலத்தில் புகையிலையற்ற சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.


