அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தில் தொடர்ந்து உணரப்படுகிறது. குறிப்பாக, ஹார்முஸ் பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக விமான எரிபொருள் செலவுகள் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் ஏர் இந்தியா தனது சர்வதேச சேவைகளை குறைக்கும் முடிவை எடுத்துள்ளது. தினசரி இயக்கப்படும் விமானங்களில் சுமார் 10% வரை குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலையை உயர்த்தியது மத்திய அரசு
இதனால் நாள் ஒன்றுக்கு 100 விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு அதிக பாதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த முடிவு தற்காலிகமானதா அல்லது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவைப் பொறுத்தே இருக்கும்.


