தாம்பரத்தில் சிக்னல் கோளாறு: சென்னையில் புறநகர் ரயில் சேவை பாதிப்பு

தாம்பரம் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக செங்கல்பட்டு – சென்னை கடற்கரை வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல மின்சார மற்றும் விரைவு ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டன.

இதனால் அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லவிருந்த பயணிகள் கடுமையான அவதிக்குள்ளாகினர். நாள்தோறும் பல லட்சம் மக்கள் பயன்படுத்தும் இந்த முக்கிய வழித்தடத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய ரயில்வே தொழில்நுட்ப பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வந்தனர். அரை மணி நேரத்திற்குப் பிறகு சிக்னல் கோளாறு முழுமையாகச் சரிசெய்யப்பட்டு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

Related Post

Latest News