பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன்பு கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அவருக்குப் பதிலாக பாஜக சார்பில் ஒருவர் முதல்வராக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியினர் நிதீஷ் குமாரின் இல்லத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
