ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய பிரதமர் மோடி, நெதர்லாந்து மற்றும் சுவீடன் பயணங்களை முடித்துவிட்டு நார்வே சென்றுள்ளார்.
பிரதமரின் பயணத்தைத் தொடர்ந்து, ஓஸ்லோவில் நார்வே பிரதமர் ஜோனாஸ் – பிரதமர் மோடியின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர் ஹெல்லே லிங் என்பவர், பிரதமர் மோடியிடம் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்குப் பதிலளிக்காமல் பிரதமர் மோடி அங்கிருந்து உடனடியாக வெளியேறிய சம்பவம் உலகளவில் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
இதுதொடர்பாக தனது ‘எக்ஸ்’ தளத்தில், ஹெல்லே லிங் விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில், பத்திரிகையாளர் ஹெல்லே லிங், “உலகின் சுதந்திரமான பத்திரிகைத்துறையிடம் இருந்து சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்துவிட்டுச் செல்லலாமே?..” என்று கேட்கிறார். ஆனால், பிரதமர் மோடி பதிலளிக்காமல் அங்கிருந்து செல்வது போன்ற காட்சிகள் அந்த விடியோவில் பதிவாகியுள்ளன.
