இனி வாலட்டிற்கு ரூ. 100 கட்டணம் – யாருக்கெல்லாம் இந்த புதிய விதிமுறை தெரியுமா?

ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் முன்னணியில் இருக்கும் போன்பே நிறுவனம், தனது வாலட் (Wallet) பயனர்களுக்கு ஒரு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்களிடம் போன்பே வாலட் கணக்கு இருந்து, அது நீண்ட நாட்களாக ‘செயலற்ற’ நிலையில் இருந்தால், அதற்கு இனி பராமரிப்பு கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. இந்த புதிய கட்டணத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில் போன்பே நிறுவனம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது.

யாரெல்லாம் இந்த 100 ரூபாய் கட்டணத்தை செலுத்த வேண்டும்?

தொடர்ந்து 365 நாட்கள், அதாவது ஒரு வருடம் முழுவதும் எந்தவொரு பணப்பரிவர்த்தனையும் செய்யாமல் இருக்கும் வாலட் கணக்குகளுக்கு மட்டுமே இந்த 100 ரூபாய் பராமரிப்பு கட்டணம் விதிக்கப்படும்.

யாரெல்லாம் கவலைப்பட தேவையில்லை?

நீங்கள் போன்பே செயலியை சாதாரணமாக வங்கி கணக்குடன் இணைத்து பயன்படுத்தி வருகிறீர்கள். ஆனால் வாலட்டை பயன்படுத்துவதே இல்லை என்றால், நீங்கள் எந்த கவலையும் பட தேவையில்லை.

செய்ய வேண்டியது என்ன?

உங்களிடம் போன்பே வாலட் கணக்கு இருந்து, அதில் நீண்ட நாட்களாகப் பணப் பரிவர்த்தனை செய்யாமல் இருந்தால், உடனடியாக ஏதேனும் ஒரு சிறிய பரிவர்த்தனை செய்து அதை ஆக்டிவாக மாற்றிக்கொள்ளு

Related Post

Latest News