பிரபல செய்தி வாசிப்பாளரும் அரசியல் ஆய்வாளருமான பால்கி ஷர்மா உபாத்யா புதிய டிஜிட்டல் ஊடக தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். “India Global Review” என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சி, இந்திய பார்வையில் இருந்து உலக அரசியல் மற்றும் சர்வதேச நிகழ்வுகளை அலசும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மற்றும் Connected TV தளங்களை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த ஊடகம், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடைய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய தளம் வெறும் தினசரி செய்திகளை வழங்குவது மட்டுமல்லாமல், சர்வதேச அரசியல் மாற்றங்கள், பொருளாதாரம் , பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் புவிசார் அரசியல் (Geopolitics) தொடர்பான தகவல் வழங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த முயற்சி, இந்திய ஊடக உலகில் உருவாகி வரும் புதிய மாற்றத்தையும் வெளிப்படுத்துகிறது. பெரிய செய்தி நிறுவனங்களின் கட்டுப்பாட்டைத் தாண்டி, தனிப்பட்ட நம்பிக்கையுடன் செயல்படும் டிஜிட்டல் செய்தி பிராண்டுகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலிருந்து உலகளாவிய குரல்கள் உருவாகும் புதிய காலத்தை இது சுட்டிக்காட்டுகிறது.
சர்வதேச விவாதங்களில் இந்தியாவின் பார்வைக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்து வரும் சூழலில், “India Global Review” போன்ற தளங்கள் உலக செய்தி உலகில் இந்தியாவின் தாக்கத்தை மேலும் விரிவுபடுத்தும் என ஊடக வட்டாரங்கள் கருதுகின்றன.
